சென்னை பள்ளி மாணவிகளுக்கு நடந்த கொடூரம் - 6 பேர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை பெரம்பூரில் ஆசை வார்த்தைக்கூறி மூன்று பள்ளி மாணவிகளை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் மூன்று சிறுவர்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை பெரம்பூரை சேர்ந்த 32 வயது பெண் ஒருவர், பள்ளிக்கு சென்ற தனது 13 வயது மகள் வீடு திரும்பவில்லை என கடந்த வெள்ளியன்று திரு.வி.க நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அச்சிறுமி தனது இரு தோழிகள் மற்றும் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து மாயமான சிறுமிகளின் தொலைபேசி எண்ணை ஆய்வு செய்த போலீசார், சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் ரோடு அருகில் உள்ள பாழடைந்த கட்டடத்தில் இருந்த சிறுமிகளை மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மூன்று சிறுவர்கள் உட்பட ஆறு பேரை கைது செய்தனர்.

சிறுமிகளிடம் நடத்திய விசாரணையில், பாழடைந்த கட்டடத்திற்கு தங்களின் ஆண் நண்பர்கள் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதனை அச்சிறுவர்கள் வேடிக்கை பார்த்ததாகவும் தெரிவித்தனர். 
  
இதையடுத்து பாதிப்புக்குள்ளான பள்ளி மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, மயிலாப்பூரில் உள்ள அரசுக்கு சொந்தமான காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் குற்றச்செயலில் ஈடுபட்ட, கொடுங்கையூரை சேர்ந்த கலிமுல்லா, அகரம் பகுதியை சேர்ந்த அபிஷேக் மற்றும் கோகுல் ஆகியோரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து புழல் சிறையில் அடைத்த போலீசார், சம்பவத்தில் தொடர்புடைய மூன்று சிறுவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

Night
Day