வேலை நிறுத்த போராட்டம் நடத்தவுள்ளதாக ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தாத விளம்பர திமுக அரசை கண்டித்து வரும் 19ஆம் தேதி சென்னையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அனைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கத்தின் அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்து ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கூட்டமைப்பின் தலைவர் பாலசுப்பிரமணியம், பல ஆண்டுகளாக ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்படாமல் உள்ளதாகவும், குறைந்தபட்ச தொகையாக 25 கிலோ மீட்டருக்கு 12 ரூபாயை அரசு நிர்ணயித்து இருப்பதாகவும், இதனை மாற்றி அமைக்க அரசை பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறினார். இதனை தொடர்ந்து, ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்காத விளம்பர திமுக அரசை கண்டித்து, வரும் 29ஆம் தேதி சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

Night
Day