சோமாலியாவால் பாதுகாப்பு படையினருக்கும் அல் - ஷபாப் போராளிக்குழுவிற்கு இடையே துப்பாக்கிச்சூடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சோமாலியாவால் பாதுகாப்பு படையினருக்கும் அல் - ஷபாப் போராளிக் குழுவிற்கு இடையே நடந்த துப்பாக்கிச்சூடு சண்டையின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

சோமாலியாவை கைப்பற்ற முனைப்பு காட்டி வரும் அல் - கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய அல் - ஷபாப் போராளிக் குழு அவ்வப்போது தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இக்குழுவை ஒடுக்குவதற்காக பெல்ட் வெயினில் உள்ள கெய்ரோ ஹோட்டலில் ராணுவ அதிகாரிகள் முக்கிய ஆலோசனையில் அவ்வப்போது ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்த ஹோட்டலை குறித்து வைத்து திடீரென தாக்குதலில் ஈடுபட்ட அல் - ஷபாப் போராளிக் குழுவிற்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. தாக்குதலில் 11 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Night
Day