கோலி இல்லாமல் டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணி செல்லாது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விராட் கோலி இல்லாமல் டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணி செல்லாது என்று இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவரான எம்.எஸ்.கே பிரசாத் தெரிவித்துள்ளார். டி20 போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், விராட் கோலி இந்திய அணியில் இருந்து நீக்கப்படலாம் என்ற தகவல் பரவி வரும் நிலையில், எம்.எஸ்.கே பிரசாத் இந்த கருத்தை முன்வைத்துள்ளார். டி-20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு விராட் கோலி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர் எனவும், ஐ.பி.எல். தொடரில் அவர் சிறப்பாக விளையாடினால்தான் உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்படுவார் என்று சிலர் நினைப்பது தவறு எனவும் சுட்டிக்காட்டினார்.

varient
Night
Day