சாம்பியன் ட்ராஃபி தொடர்- இந்திய அணி அறிவிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

 சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய கிரிக்கெட் அணிக்கு ரோகித் ஷர்மா கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், பும்ரா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். 

குறிப்பாக நீண்ட நாட்களுக்கு பிறகு பந்துவீச்சாளர் முகமது ஷமி மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சாம்பியன் டிராபி தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை தவிர மற்ற போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.  

Night
Day