ரோகித் சர்மாவின் உடல் எடை - விமர்சித்த காங்கிரஸ் தலைவர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


கடும் கண்டனங்கள் எதிரொலியாக இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மாவை உருவ கேலி செய்த தனது பதிவை காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் ஷாமா முகமது நீக்கியுள்ளார்.

பருமனாக இருப்பதாக ரோகித் சர்மாவை உருவ கேலி செய்து ஷாமா முகமதுவின் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ஒரு விளையாட்டு வீரருக்கு ஏற்ற அளவை காட்டிலும் ரோகித் சர்மா சற்று பருமனாக இருப்பதாகவும் அவர் எடையை குறைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்தியா இதுவரை கண்டிராத மிகவும் ஈர்ப்பு இல்லாத கேப்டன் ரோகித் என்றும் ஷாமா முகமது பதிவிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. ஷாமா முகமதுவின் பதிவுக்கு கடும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் வலுத்த நிலையில் தனது பதிவை நீக்கியுள்ளார்.

Night
Day