வீராங்கனை உயிரிழப்பு - ரயிலில் வழங்கிய சிக்கன் ரைஸ்தான் காரணமா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 ரயிலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்ட கோவையை சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை எலினா லேட்டர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று காலை குவாலியரில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் பங்கேற்று விட்டு எலினா ரயில் மூலம் சென்னை வந்துள்ளார். அப்போது ரயிலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டதாகவும், அதனால்  உடல் உபாதை ஏற்பட்ட  நிலையில் எலினாவை அவரது பெரியப்பா அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்துவிட்டு பின்னர் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். மீண்டும் எலினாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்ல்லப்பட்ட நிலையில், வழியிலேயே உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட பெரவள்ளூர் போலீசார் ரயிலில் சாப்பிட்ட சிக்கன் ரைஸ் தான் உயிரிழப்பிற்கு காரணமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day