2025 ஐபிஎல் போட்டியை முன்னிட்டு அணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


2025 ஐபிஎல் போட்டியை முன்னிட்டு அணிகளுக்கு பிசிசிஐ புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஐபிஎல் சீசன்  தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே சிஎஸ்கே போன்ற அணிகள் முன் பயிற்சி முகாமை நடத்துவது வழக்கம். 

இதனால் போட்டி நடைபெறும் மைதானங்களை சேதப்படுத்துவதாக குற்றச்சாட்டு இருந்து வந்த நிலையில் ஐபிஎல் அணிகள் பயிற்சியில் ஈடுபடுவது தொடர்பான கடுமையாக கட்டுப்பாடுகளை பிசிசிஐ விதித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு மைதானத்திலும் ஏழு பயிற்சி முகாம்களை மட்டும் நடத்த வேண்டும் , மின்விளக்குகளுக்கு கீழ் மூன்று மணி நேரம் வரை நடத்தலாம் என்றும், அதில் 2 மணி நேரம் பயிற்சி ஆட்டங்களாகவோ இல்லை வலைப் பயிற்சியாகவோ நடத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.இதேபோன்று பயிற்சி ஆட்டங்களை நடத்தும்போது ஒரே ஒரு ஆடுகளத்தை மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்றும் பயிற்சி ஆட்டத்தை மூன்றரை மணி நேரத்திற்கு மேல் நடத்தக்கூடாது என்றும் பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.

Night
Day