எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் திமுகவினரால் அச்சுறுத்தலுக்கு ஆளான பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும், இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக தலைமையிலான விளம்பர அரசை, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார். திமுக தலைமையிலான அரசு தங்களது சொந்த கட்சியினரை கட்டுப்படுத்தினாலே போதும், நாட்டில் குற்றங்கள் ஏதும் நடைபெறாமல் பார்த்துக்கொள்ளமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் வலைதளப் பதிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் காரில் சென்ற பெண்களை திமுக கொடி கட்டிய காரில் வந்த நபர்கள் விடாமல் துரத்தி வந்து சாலையின் நடுவே குறுக்கே நின்று வழியை மறித்து காரில் இருந்த பெண்களை கொடூரமாக அச்சுறுத்தும் வீடியோ வெளியாகியிருப்பது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். இது போன்று பெண்களுக்கு பாதுகாப்பற்ற, வாழ தகுதியற்ற ஒரு மாநிலமாக தமிழ்நாடு மாறியிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது - இது போன்ற அவலங்கள்தான் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன - இது வன்மையான கண்டனத்திற்குரியது என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் கடந்த 10ஆம் தேதி தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான இரண்டு சட்டத்திருத்த முன்வடிவுகளை அறிமுகம் செய்துவைத்து,"பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் திகழ்ந்து கொண்டு வருகிறது என்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி, ஒடுக்கி வருவதாகவும்" தமிழக முதல்வர் உரை நிகழ்த்தினார் - பெண்களை பின் தொடர்ந்தால் ஏற்கனவே 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை என்று இருந்த சட்டம், 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் சிறை என்று திருத்தப்பட்டது - இந்த சட்ட திருத்தம் கடந்த 25ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்ததாக அரசும் அறிவித்தது - ஆனால் என்ன ப்ரயோஜனம்? அன்றைக்கு இரவே திமுகவினர் பெண்களை துரத்தி துன்புறுத்தும் வேலையில் இறங்கிவிட்டார்கள் - திமுகவில் தலைவர் போடும் சட்ட திட்டங்களை அவரது தொண்டர்களே முதலில் மதிப்பதில்லை என்பது நிரூபணமாகிவிட்டதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்ற சட்டங்களை வைத்துதான் புரட்சித்தலைவி அம்மா, சட்டம் ஒழுங்கை நன்றாக காப்பாற்றினார் - பெண்களின் பாதுகாப்பும் உறுதிசெய்யப்பட்டது - ஆனால், இன்றோ யாருக்குமே பாதுகாப்பு இல்லை - அதிலும் குறிப்பாக பெண்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லாத அவல நிலைதான் இந்த திமுக விளம்பர ஆட்சியில் உள்ளதாக புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே, திமுக தலைமையிலான அரசு தங்களது சொந்த கட்சியினரை கட்டுப்படுத்தினாலே போதும், நாட்டில் குற்றங்கள் ஏதும் நடைபெறாமல் பார்த்துக்கொள்ளமுடியும் - சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் திமுகவினரால் அச்சுறுத்தலுக்கு ஆளான பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் - இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்வதாக கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.