எழுத்தின் அளவு: அ+ அ- அ
எலி மருந்தை சுவாசிப்பதால் முதலில் ஆக்ரோஷம் ஏற்படும் என்றும், அடுத்த கட்டமாக தசைப்பிடிப்புகள் ஏற்பட்டு வலி அதிகமாக இருக்கக் கூடும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையை அடுத்த குன்றத்தூரில் எலிகள் தொல்லை காரணமாக வீட்டில் வைக்கப்பட்டிருந்த எலி மருந்தின் நெடி பரவி இரண்டு குழந்தைகள் உயிரிழந்த நிலையில், அவர்களது பெற்றோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், எலி மருந்தை சுவாசிப்பதால் முதலில் ஆக்ரோஷம் ஏற்படும் என்றும், அடுத்த கட்டமாக தசைப்பிடிப்புகள் ஏற்பட்டு வலி அதிகமாக இருக்கக் கூடும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வலிப்பு வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறிய மருத்துவர்கள், அடுத்த கட்டமாக கிட்னி மற்றும் லிவர் ஆகியவை செயலிழக்க கூடும் என்றும் கூறியுள்ளனர். மேலும், வீட்டில் எலி வராமல் இருப்பதற்காக, மருந்துகளை ஸ்பிரே செய்யும் போது, வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து ஜன்னல் கதவுகளை திறந்து வைக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.