காவலர்கள் மீது மதுபோதை கும்பல் சரமாரி தாக்குதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் விசாரணைக்காக சென்ற இரண்டு காவலர்களை லத்தியை பிடுங்கி போதை ஆசாமிகள் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் நேரு சிலை அருகே உள்ள டாஸ்மாக்கில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக மது அருந்தியவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் 6 பேர் சேர்ந்து இசக்கி என்பவரை தாக்கி உள்ளனர். இதுகுறித்து புகாரின் பேரில் காவலர்களான ராம்குமார் மற்றும் கருப்பசாமி ஆகியோர் இசக்கி மீது தாக்குதல் நடத்தியவர்களை மறுநாள் காலை காவல் நிலையத்திற்கு வருமாறு தெரிவித்துள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்த அந்த கும்பல் காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களிடமிருந்த லத்தியை பிடுங்கி இருவரையும் சரமாரியாக தாக்கினர். இதன் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலான நிலையில் கீழ ஆவரம்பட்டியை சேர்ந்த 9பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, 7 பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாகியுள்ள இருவரை தேடி வருகின்றனர்.

Night
Day