கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தல்...- கண்டும், காணாமல் இருக்கும் விளம்பர அரசு

எழுத்தின் அளவு: அ+ அ-

வணக்கம் நேயர்களே... இது மக்களோடு ஜெயா ப்ளஸ்...

விளம்பர திமுக ஆட்சியில் நாள்தோறும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், இன்னல்களை அலசுவதுடன், தீர்வை நோக்கிய முயற்சியாகவும் களமிறங்கியுள்ளோம் நாங்கள்...

தற்போது நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு லட்சக் கணக்கில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருவதால் மக்கள் பெரும் கவலை அடைந்துள்ள நிலையில், இதற்கான தீர்வுகள் குறித்து விரிவாக அலச உள்ளோம்.. இதற்காக களத்திலிருந்து இணைகிறார் நமது செய்தியாளர் செல்வராஜ்...

நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள 122 கல்குவாரிகள் மூலமாக, நாள்தோறும் ஆயிரக்கணக்கான டன் கனிம வளங்கள் கேரள மாநிலத்திற்கு கடத்தப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விளம்பர திமுக அரசு கனிம வளக் கொள்ளையை கண்டும், காணாமல் இருப்பது குறித்து விரிவாக அலசுகிறது இந்த செய்தித்தொகுப்பு...

நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு கேரள மநிலத்திற்கு கடத்தப்பட்டு வருகிறது. அதில், நெல்லை மாவட்டத்தில் 81 கல்குவாரிகளும், தென்காசி மாவட்டத்தில் 41 கல்குவாரிகளும் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த கல்குவாரிகள் மூலமாக நாள்தோறும் லட்சக்கணக்கான டன் கனிம வளங்கள் தென்காசி மாவட்டம் புளியரை வழியாக லாரி, லாரி ஆக கடத்தப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது...

அதாவது நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தரமான ஒரு டன் எம்சாண்ட் வெறும் 2000 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை தற்போது விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால், கேரள மாநிலத்தில் ஒரு டன் 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. கேரளா மாநிலத்தில் கனிம வளங்களுக்கு பல மடங்கு விலை கிடைப்பதாக கல்குவாரி உரிமையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்...

மலைகள் நிறைந்த மாநிலமாக கேரளா உள்ளதால் அங்கிருந்து கற்கள் எடுத்தால் நிலச்சரிவு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் கற்களை எடுக்காமல் இருந்து வருகின்றனர். ஆனால் விளம்பர திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் உள்ள உரிமைகள் மற்றும் கனிம வளங்கள் என அனைத்தையுமே வெளி மாநிலங்களுக்கு வாரி வழங்கி வருகிறது...

தொடர்ந்து தமிழகத்தில் கனிம வளங்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுவதன் மூலம் வீடுகள் மற்றும் அரசு கட்டுமான பணிகளுக்கு தேவையான கனிம வளங்கள் கிடைக்காத சூழல் நிலவி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்...

கேரளாவில் இருந்து ஒரு பிடி மண்ணைக் கூட எடுத்துக் கொண்டு தமிழகத்திற்குள் வர முடியாது. ஆனால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகளில் கேரள மாநிலத்திற்கு கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருவது வேடிக்கையாக இருந்து வருகிறது. இதனை விளம்பர திமுக அரசும் வேடிக்கை பார்த்து வருவதுதான் பொதுமக்களிடம் மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கனிமவள கொள்ளை தொடர்பாக பொதுமக்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தியும் அரசு கண்டுகொள்ளவில்லை. ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் 50 கல்குவாரிகள் செயல்பட்டு வரும் நிலையில், கடந்த காலங்களில் கனிமவள கொள்ளை நடந்ததாக கூறி தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு பல்வேறு போராட்டங்களை நடத்தினார்.

ஆனால், தற்போது அவர் தொகுதியில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகளில் கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டு வருவதை கண்டும், காணாமல் மௌனமாக இருந்து வருகிறார். ஒருவேளை தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் தேவையான உதவிகள், பணம் உள்ளிட்டவைகள் கேரளா மாநிலத்திற்கு கனிம வளங்களை கடத்திச் செல்லும் நபர்கள் வழங்கி வருகின்றனரோ என பொதுமக்கள் கேள்வி எழுப்பக்கூடிய சூழ்நிலைதான் இருக்கிறது.

விளம்பர ஆட்சியில் கனிம வள கொள்ளைக்கு எதிராக போராடுபவர்கள் கொலை செய்யப்படுவதும், அடிக்கடி மிரட்டலுக்கு உள்ளாவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் விளம்பர திமுக அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என சமூக ஆர்வலர்களும் மற்றும் பல்வேறு தரப்பை சேர்ந்தவர்களும் தெரிவித்துள்ளனர்.

Night
Day