தூணிலும் கிப்லி துரும்பிலும் கிப்லி... ட்ரெண்டிங்கில் கலக்கும் போட்டோக்கள்...

எழுத்தின் அளவு: அ+ அ-

இன்றைய காலக்கட்டத்தில் சமூக வலைத்தளங்கள் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் தளமாக உள்ளது. இதற்கு தீனிப்போடும் வகையில் Facebook, Instagram, Whatsapp என அனைத்து வலைதளங்களிலும் புது புது அப்டேட்டுகள் வந்து இளைஞர்களை அவ்வபோது கவர்ந்து சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் அடிக்கும். அந்த வகையில் தற்போது கிப்லி எனப்படும் அனிமேஷன் படங்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்த்து வருகிறது. இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு... 

ஓப்பன் AI நிறுவனத்தின் Chat gpt, எலான் மஸ்கின் எக்ஸ் தளத்தில் உள்ள க்ரோக் உள்ளிட்ட செயலிகளில் நம்முடைய புகைப்படங்களை உள்ளீடு செய்த சில விநாடிகளில், அதனை கிப்லி அனிமேஷன் புகைப்படங்களாக மாற்றி கொடுத்து விடுகிறது. இதற்கு கட்டணங்கள் இல்லாவிட்டாலும் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புகைப்படங்களை மட்டுமே கிப்லி படங்களாக மாற்ற முடியும்‌. கிப்லி ஆர்ட் கிடைக்கும் வரவேற்பை தொடர்ந்து வேறு சில நிறுவனங்களும் கிப்லி ஆர்ட் செயலியை உருவாக்கும் முயற்சியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தற்போது கிப்லி புகைப்படங்கள் ட்ரண்ட் அடிக்க ஆரம்பித்தாலும் ஜப்பானை சேர்ந்த ஸ்டூடியோ கிப்லி என்ற நிறுவனம்தான் இதற்கெல்லாம் முன்னோடியாக பார்க்கப்படுகிறது. ஸ்பிரிட்டட் அவே, மை நெய்பர் தொதோரோ, உள்ளிட்ட பிரபலமான அனிமேஷன் படங்களை இந்த கிப்லி ஸ்டுடியோ உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் தலைவர்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை அனைவரும் அனிமேஷன் புகைப்படங்களை பெரிதும் விரும்புகின்றனர். ஆனால் மிஷின் தயாரிக்கும் ஓவியங்களில் தனக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை என்று கிப்லி ஸ்டூடியோ நிறுவனர் மியாசாகி பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

கிப்லி புகைப்படங்களுக்காக அனைவரும் இந்த தளத்தை பயன்படுத்த ஆரம்பித்த நிலை கட்டுக்கடங்காத வேகத்தின் காரணமாக, ஓபன் ஏ.ஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சால் அல்ட்மென் தனது சமூக வலைதளப் பக்கத்தில் "கிப்லி புகைப்படங்களை ஜென்ரேட் செய்வதிலிருந்து கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள்ள முடியுமா? இது மிகவும் பயங்கரமானதாக இருக்கிறது. எங்களின் குழுவுக்கு தூக்கம் தேவை." எனப் பதிவிட்டிருந்தார். இருப்பினும் இளைஞர்களை பித்துப்பிடிக்க வைத்துள்ள கிப்லி புகைப்படங்கள் நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் அதிகரித்த வண்ணமே உள்ளது.

அனிமேஷன் படங்கள் மற்றும் சீரிஸ்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் சூழலில் chat gpt யின் கிப்லி படங்கள் தனி இடத்தை பிடித்து வருகிறது. ஸ்டூடியோ கிப்லி தயாரிப்பில் உருவான தி விண்ட் ரைசஸ் எனும் அனிமேஷன் படத்தில் இடம்பெற்ற வெறும் 4 விநாடி கூட்ட நெரிசல் காட்சியை உருவாக்க 15 மாதங்கள் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது 20 விநாடிகள் செலவிட்டாலே அனிமேஷன் படங்களை தெள்ளத் தெளிவாக கொடுத்து விடும் இந்த ஏஐ, பின்னால் எத்தனை பாதகங்கள் அமைந்திருக்கும் என்பது போகப்போக நமக்கு தெரிய வரும் என்பதே நிதர்சனம்...

Night
Day