மனைவியின் ரகசிய காதலுக்கு GREEN SIGNAL.. கணவர் செய்த வியத்தகு காரியம்

எழுத்தின் அளவு: அ+ அ-

நாடு முழுவதும் திருமணத்தை மீறிய ரகசிய காதல் உறவால் ஏற்படும் கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ள சம்பவம் மொத்த பேரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்..

எங்கே கணவன் கையாலேயே படுகொலை செய்யப்படுவோமோ என பயந்துகிடந்த மனைவிக்கு அவளது ரகசிய காதலனுடனேயே திருமணம் செய்து வைத்த உயர்ந்த மனிதர் இவர் தான்..!

உத்தரப்பிரதேச மாநிலம் சாந்த்கபூர் பகுதியில் உள்ள கட்டார் ஜோட் கிராமத்தை சேர்ந்தவர் பப்லு. இவரது மனைவி ராதிகா. இவர்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்று, தற்போது 2 குழந்தைகள் உள்ளனர். கூலி தொழிலாளியான பல்லு வேறு மாநிலத்தில் வேலை பார்த்துவர கிராமத்தில் குழந்தைகளோடு வாழ்ந்து வந்திருக்கிறார் அவரது மனைவி ராதிகா. 

இந்தநிலையில் கணவன் இல்லாத குறைக்கு ஒத்தாசையாக இருந்து வந்த விகாஷ் என்ற இளைஞர் மீது ராதிகாவுக்கு காதல் மலர்ந்துள்ளது. இருவரும் திருமணத்தை மீறிய உறவில் உல்லாசமாக இருந்து வந்த நிலையில் இந்த ரகசிய காதல் விவகாரம் அரசல் புரசலாக கணவன் பப்லுவின் காதுகளுக்கு எட்டியது. மனைவியின் ரகசிய காதல் உறவு பப்லுவுக்கு நெஞ்சில் ஈட்டியை சொருகியது போல இறங்க, வேலையை பாதியில் விட்டுவிட்டு கிராமத்துக்கு திரும்பியவன் மனைவியை ரகசியமாக கண்காணிக்க தொடங்கியதாக தெரிகிறது.

துப்பறிவாளன் விஷால் ரேஞ்சுக்கு பப்லு, துப்பு துலக்கியதில் மனைவி ராதிகா-விகாஷ் இடையேயான ரகசிய உறவு தெரியவந்தது. இப்படி மனைவியின் ரகசிய உறவை கணவனே உறுதி செய்த போதிலும் அடுத்து நடந்தது எல்லாமே சினிமாவையே மிஞ்சும் ட்விஸ்டாகவே இருந்தது.


வேறு மாநிலத்தில் சோறு தண்ணீர் இல்லாமல் கூலி வேலை செய்து குடும்பத்துக்காக பாடுபட்டுக்கொண்டிருக்க, வேறு ஒருவருடன் உல்லாச உறவா என மனைவி மீது எந்த வித கோபத்தை காட்டாத பப்லு, ஜென் மோடில் தியானத்தை காட்டிலும் ஆழ்ந்த அமைதியை கடைபிடித்திருக்கிறார். நானா- ரகசிய காதலனா என பப்லு மனைவிக்கு சாய்ஸ் கொடுக்க, ராதிகாவோ ரகசிய காதலனை டிக் செய்ததாக தெரிகிறது. இதையடுத்து பப்லு செய்த காரியதாம் தனி ரகம் என்று சொல்லும் அளவுக்கு அமைந்துள்ளது. 

கிராம பெரியவர்களை கூட்டி மனைவியின் ரகசிய காதலை அம்பலப்படுத்திய பப்லு, அவளது ரகசிய காதனுக்கே மனைவியை மணமுடித்து வைக்க போவதாகவும் அறிவித்தார். இதைக்கேட்டு, ராதிகா உட்பட மொத்த பேரும் திகைத்துவிட்டனர்..ஆனால் பப்லு தன் முடிவில் உறுதியாக இருந்ததால் கணவன் கண்முன்னே மனைவிக்கு அவளது ரகசிய காதலனுடன் இனிதே திருமணம் நடந்தது. கிராமத்தில் உள்ள கோவிலில் கணவன் சாட்சியாக ரகசிய காதலனை மாலை மாற்றி கரம் பிடித்தார் ராதிகா. 

என்ன தான் BROAD MINDED கணவனாக இருந்தாலும் இந்த அளவுக்கா? என உச்சி கொட்டியவர்களுக்கு பப்லுவின் இந்த முடிவுக்கான பின்னணி, என்ன கொடும சார் என சொல்லும் அளவுக்கு இருந்தது. இதே உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் ஒரு கொடுமை நடந்தது. அதாவது, அமெரிக்க கடற்படை நிறுவன அதிகாரி சவுரப் ராஜ்புத் என்பவரை, அவரது மனைவி முஸ்கன் ரஸ்தோகியும், அவளது ரகசிய காதலன் சாஹில் சுக்லாவும் சேர்ந்து படுகொலை செய்தது தான் அந்த கொடுமை.. 

ரகசிய காதலனோடு சேர்ந்து கணவனை கொன்ற மனைவி முஸ்கன், கணவனின் சடலத்தை 15 துண்டுகளாக வெட்டி அதை பொட்டலமாக மடித்து காலி டிரம்மில் போட்டு, டிரம்மின் மீது கான்கீரிட் கலவையை பூசி சமாதி கட்டினார். இது நாடு முழுவதும் உள்ள கணவன்மார்களை கதிகலங்க வைத்த நிலையில் அப்படி கான்கீரிட் டிரம்மில் சமாதி ஆவதற்கு பதிலாக என்ன வுட்டுடுமா தாயீ என கூறி மனைவிக்கு ஒரு கும்புடு போட்டு திருமணம் செய்து வைத்ததாக விளக்கினார் பப்லு.  

சமீபகாலமாக ரகசிய காதலுடன் சேர்ந்து மனைவிமார்கள் கணவனையே தீர்த்துக்கட்டும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படும் நிலையில் டிரம்மில் கணவனை கொன்று சிமெண்ட் பூசிய பெண்ணை நினைத்து ஆடிப்போன பப்லு, இப்படியொரு முடிவை எடுத்திருப்பதும், ரகசிய காதலனுக்கு தன்னுடைய மனைவியை திருமணம் செய்து வைத்திருப்பதும், சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

Night
Day