ஆப்பிரிக்கா: காலரா பரவுவதாக தவறான தகவல் பரவியதால் படகில் தப்பித்து சென்ற 96 நபர்கள் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான மொசாம்பிக்கில் காலரா பரவுவதாக தவறான தகவல் பரவியதால், படகில் தப்பித்து சென்ற 96 நபர்கள் உயிரிழந்தனர். மொசாம்பிக் நாட்டில் காலரா நோய் தாக்கம் அதிகரிப்பதாக தவறான தகவல் பரவியுள்ளது. இதனால் அச்சமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், படகில் தப்பித்து செல்ல முயன்றனர். ஆனால், படகில் போதிய இடவசதி இல்லாமல் கூட்டநெரிசல் ஏற்பட்டு படகு கவிழ்ந்து விபத்தானது. இதில் கடலில் மூழ்கி 96 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

Night
Day