உலகின் பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியல் : 3வது இடத்திற்கு ஜெர்மனி முன்னேற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உலக பொருளாதாரத்தில், உள்நாட்டு மொத்த உற்பத்தி அடிப்படையில் 3-ஆம் இடத்தில் இருந்த ஜப்பான் தற்போது 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில வருடங்களாக பல சிக்கல்களால் ஜப்பானின் பொருளாதாரம் சரிவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், ஜப்பானிலிருந்து வெளிவந்திருக்கும் அதிகாரபூர்வ தகவல்களின்படி, ஜப்பானிய பொருளாதாரம், கடந்த ஆண்டை விட ஒன்று புள்ளி 9 சதவீதம் அதிகரித்துள்ளது. இருந்தும், இதுவரை தக்க வைத்திருந்த 3-ஆம் இடத்திலிருந்து 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், ஜெர்மனி 3வது இடத்தில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Night
Day