குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார் ஜெனரல் இகோர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரஷ்யாவில் மாஸ்கோ நகரில் நடந்த குண்டு வெடிப்பில் ரஷ்ய அணுசக்தி படைகளின் தலைவர் ஜெனரல் இகோர் கொல்லப்பட்டார். ரஷ்யா – உக்ரைன் போர் கடந்த 2022 பிப்ரவரி 24ம் தேதி தொடங்கி தற்போது வரை நீடித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நேற்று நடந்த குண்டு வெடிப்பில் ரஷ்ய அணுசக்தி படைகளின் தலைவர் கொல்லப்பட்டார். ரஷ்ய அதிபரின் கிரெம்ளின் மாளிகைக்கு அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த மின்சார இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு ரிமோட் மூலம் வெடிக்க வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ரஷ்யாவின் அணு, உயிரியல் மற்றும் ரசாயன பாதுகாப்பு படைகளின் தலைவர்களில் ஒருவரான லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் கொல்லப்பட்டார். மேலும் அவரது உதவியாளரும் உயிரிழந்தார். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு அமைப்பான எஸ்பியூ காரணம் என ரஷ்யா குற்றம்சாட்டி உள்ளது. 

varient
Night
Day