விளையாட்டு
நியூசிலாந்து அணியின் கேப்டனாக மிட்செல் சான்ட்னர் நியமனம்
நியூசிலாந்து அணியின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக சுழ?...
பிரிஸ்பேனில் நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 445 ரன்கள் எடுத்த நிலையில், இன்றைய 5ம் நாள் ஆட்டத்தின்போது கடைசி விக்கெட்டை இழந்த இந்திய அணி 260 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 185 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், 2வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி, 89 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் 2வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதையடுத்து 275 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 8 ரன்களை எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. போட்டியை தொடர முடியாத நிலையில் 3வது டெஸ்ட் டிராவில் முடிவதாக அறிவிக்கப்பட்டது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகளுடன் சமநிலையில் உள்ளனர்.
நியூசிலாந்து அணியின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக சுழ?...
வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை உட்பட...