மாணவிக்கு 60 காதல் கடிதங்கள் கொடுத்து ஆசிரியர் லவ் டார்ச்சர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவில் 11 வயது மாணவிக்கு 60 காதல் கடிதங்களை தந்து லவ் டார்ச்சர் கொடுத்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

தெற்கு கரோலினாவில் உள்ள ஸ்டார் ஆரம்ப பள்ளியில் டிலான் ராபர்ட் டியூக்ஸ் என்பவர் ஆசிரியராக பணியாற்றினார். அவர், அப்பள்ளியில் படித்த 11 வயது மாணவி ஒருவருக்கு தொடர்ந்து, 60க்கும் மேற்பட்ட காதல் கடிதங்களை கொடுத்து, தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். தொடர்ந்து, அம்மாணவி செல்லும் தேவாலயத்திற்கும் சென்று அவருக்கு தொல்லை அளித்துள்ளார். இதனையடுத்து, மாணவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ஆசிரியரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவிக்கு காதல் கடிதங்களை கொடுத்து தொல்லை கொடுத்த அவர், கடந்த ஆண்டு சிறந்த ஆசிரியர் என்ற விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day