வரும் 20ம் தேதி அதிபராக பதவி ஏற்கவுள்ள நிலையில் டிரம்ப்புக்கு நெருக்கடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆபாச நடிகைக்கு டிரம்ப் பணம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் தண்டனை விவரங்கள் நாளை வெளியாகும் என்பதால் அமெரிக்காவில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.


கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப், தன்னுடனான தொடர்பு குறித்து மறைக்கும்படி ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், இதை எதிர்த்து டிரம்ப் மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் தண்டனை அறிவிப்பை தள்ளிவைக்கும்படி டிரம்ப் விடுத்த வேண்டுகோளும் நிராகரிக்கப்பட்ட நிலையில், தண்டனை விவரங்கள் நாளை வெளியாகிறது. வரும் 20ம் தேதி பதவி ஏற்கவுள்ள நிலையில், டிரம்பிற்கு எதிரான இந்த அறிவிப்பு அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day