அரசு நர்ஸிங் கல்லூரியில் மாணவர்களுக்கு ராகிங் கொடுமை - 5 மாணவர்கள் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரளாவில் அரசு நர்ஸிங் கல்லூரியில் ஐந்து மாணவர்கள் ராகிங் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கேரள மாநிலம், கோட்டயம் காவல் நிலையத்திற்குட்பட்ட அரசு நர்ஸிங் கல்லூரியில் இளநிலை மூன்றாமாண்டு படிக்கும் மாணவர்கள், முதலாமாண்டு மாணவர்களை நிர்வாண கோலத்தில் நிற்க வைத்தும், பளு தூக்கும் உபகரணங்களைக் கொண்டு சித்ரவதை செய்தும் அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி, அதனை வீடியோவாக எடுத்து மிரட்டி வந்துள்ளனர். இந்த கொடுமைகளை தாங்க முடியாத மாணவர்கள் கோட்டயம் போலீஸில் அளித்த புகாரின் பேரில் ஐந்து மாணவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Night
Day