எஸ்.பி.ஐ வங்கியில் கொள்ளை முயற்சி

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை திருவல்லிக்கேணி காவல்நிலையம் எதிரே உள்ள எஸ்பிஐ வங்கியின் கதவை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் எஸ்.பி.ஐ. வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் அலுவலகத்தை திறந்த போது வங்கியின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், வங்கிக்கு வந்த திருவல்லிக்கேணி துணை ஆணையர் தலைமையிலான போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சம்பந்தப்பட் வங்கி இன்று செயல்படாது என்றும், அருகில் உள்ள வேறொரு கிளையை மக்கள் உபயோகிக்குமாறு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதனிடையே வங்கியில் இருந்து பணம் எதுவும் கொள்ளையடிக்கப்படவில்லை என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் வங்கி கதவை உடைத்தது யார், எதற்காக என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Night
Day