ஓய்வு எஸ்ஐ ஜாகீர் உசேன் கொலை வழக்கு - தலைமறைவான பெண்ணை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை

எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லையில் கொலை செய்யப்பட்ட ஓய்வு பெற்ற எஸ்ஐ ஜாகிர் உசேனின் கையெழுத்தை போலியாக போட்டு நூர்நிஷா தரப்பினருக்கு மின்இணைப்பு மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.

நெல்லை டவுன் ஜாமியா தைக்கா தெருவை சேர்ந்த ஜாகீர் உசேன் பிஜிலி என்பவரும், அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற முகமது தவுபிக் என்பவருக்கும் இடையே வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடம் குறித்து பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 18-ந் தேதி ஜாகீர் உசேன் பிஜிலி பள்ளிவாசலில் தொழுகையை முடித்து விட்டு வீடு திரும்பிய போது வெட்டி கொலை செய்யப்பட்டார். 
இதுதொடர்பாக திருநெல்வேலி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கிருஷ்ணமூர்த்தி என்ற தவ்ஹீத் அவரது தம்பி கார்த்திக் உள்ளிட்ட 5 பேரை இதுவரை கைது செய்துள்ளனர். தலைமறைவான கிருஷ்ணமூர்த்தி என்ற தவ்ஹீத்தின் மனைவி நூருன்னிஷாவை தேடி வருகின்றனர். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட 36 சென்ட் நிலத்தை உரிமை கொண்டாடுவதற்காக ஜாகிர் உசேனின் கையெழுத்தை போலியாக போட்டு, நூர்நிஷா தரப்பினருக்கு மின்இணைப்பு மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து நெல்லை போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர்.

Night
Day