காரைக்குடியில் பிரபல ரவுடியை ஓடஓட வெட்டிக்கொலை செய்த சம்பவத்தால் பரபரப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காரைக்குடியில் ரவுடி ஓடஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்ற பிரபல ரவுடி ஜான் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தின் பதற்றம் தணிவதற்குள் காரைக்குடியில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. சேர்வா ஊரணியைச் சேர்ந்த பிரபல ரவுடி மனோஜ், கடந்த சில தினங்களுக்கு முன்பாக நிபந்தனை ஜாமினில் வெளியே வந்துள்ளார். இவர், காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் கையெழுத்து போட சென்றபோது, காரில் வந்த மர்ம நபர்கள், மனோஜை ஓடஓட விரட்டி படுகொலை செய்தனர். அப்போது, மனோஜுடன் இருந்த அவரின் இரு நண்பர்களையும் அந்த கும்பல் வெட்டிவிட்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது. 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மனோஜின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், மனோஜை கொலை செய்த கும்பலை தேடி வருகின்றனர். பரபரப்பான சாலைப் பகுதியில் நடந்துள்ள கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Night
Day