சட்டையை கிழித்துவிடுவேன் - காவல் நிலையத்தில் பெண் எஸ்.ஐ.க்கு மிரட்டல்

எழுத்தின் அளவு: அ+ அ-

காரைக்குடி அருகே காவல் நிலையத்தில் பெண் காவல் உதவி ஆய்வாளரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சிவகங்கை மாவட்டம் சோமநாதபுரம் காவல் நிலையத்தில் பிரணிதா என்பவர் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இதனிடையே புகார் தொடர்பான விசாரணைக்காக  காவல்நிலையத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் இளைய கவுதமன் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் சென்றுள்ளார். அப்போது, பெண் எஸ்ஐ பிரணிதாவிடம் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்து வெளியில் செல்ல முயன்ற பெண் காவல் ஆய்வாளரின் கையை பிடித்து இளைய கவுதமன் ஆதரவாளர்கள் இழுத்து தாக்கியதாகவும்  கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அலறி துடித்த பெண் அதிகாரியை சக காவலர்கள் மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், சிவகங்கை மாவட்ட கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Night
Day