சித்தூரில் கொள்ளை முயற்சி - 7 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 ஆந்திரா மாநிலம் சித்தூரில் பேன்சி கடை உரிமையாளர் வீட்டில் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்தனர். 

கடந்த 2 தினங்களுக்கு முன்பாக சந்திரசேகர் வீட்டுக்குள் 7 பேர் கொண்ட கும்பல் புகுந்தநிலையில், அதில் ஆறு பேரை அப்பகுதி மக்கள் மடக்கிப்பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். தலைமறைவாக இருந்த நபரை தற்போது போலீசார் கைது செய்தநிலையில், அவர்களிடம் இருந்து ரப்பர் துப்பாக்கிகள் உள்ளிட்ட பொருட்களையும் கைப்பற்றினர். இவர்கள் 7 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், சிறையில் அடைத்தனர்.

Night
Day