சுரேஷ் ராஜனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மறுப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனுக்கு எதிரான நில மோசடி வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

கன்னியாகுமரி மாவட்ட பஞ்சாயத்து தலைவருக்கு சொந்தமான 60 லட்ச ரூபாய்க்கு வாங்கிய நிலத்தை அபகரிக்கும் நோக்கில் மீண்டும் அவரது உதவியாளர் பெயருக்கு மாற்றி எழுதி தருமாறு மிரட்டல் விடுத்ததாக கூறி, ரியல் எஸ்டேட் அதிபர் தயா பாக்கியசிங் வடசேரி காவல்நிலையத்தில் 
புகார் அளித்தார். அதன் அடிப்படையில் நாகர்கோவில் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், முன்னாள் அமைச்சருக்‍கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறி, சுரேஷ் ராஜனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது எனத் தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்தார்.

Night
Day