எழுத்தின் அளவு: அ+ அ- அ
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் வசிக்கும் சிறுமிகளை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்த 2 சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு காரணமான ஜெராக்ஸ் கடை உரிமையாளர் இதுவரை கைது செய்யப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கொளத்தூர் தில்லைநாயகம் பகுதியை சேர்ந்த 9 மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் 2 சிறுமிகள், அதே பகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடைக்கு சென்று ஜெராக்ஸ் எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்போது, அந்த சிறுமிகளிடம் ஜெராக்ஸ் கடை உரிமையாளர் பாலகுமாரன் பழகி வந்ததாக தெரிகிறது. மேலும், அதே பகுதியை சேர்ந்த 2 சிறுவர்களை அந்த சிறுமிகள் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஜெராக்ஸ் கடை உரிமையாளர் பாலகுமாரன் அந்த சிறுமிகளின் இன்ஸ்டா ஐ.டியை சிறுவர்களிடம் கொடுத்து பழக வைத்ததாக தெரிகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன் சிறுமிகள் திடீரென மாயமானதை அடுத்து பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். சிறுமிகளின் செல்போனை வைத்து ஆய்வு செய்ததில் அவர்கள் மதுரையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்த ஜெராக்ஸ் கடை உரிமையாளர் பாலகுமாரன், 2 சிறுவர்களை வைத்து சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. இதனை பாலகுமாரன் வீடியோ எடுத்தது மட்டுமில்லாமல், காரைக்குடியை சேர்ந்த வேறொரு நபருக்கு வீடியோ கால் மூலம் காண்பித்துள்ளார். அவர் யார் என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகத நிலையில், சிறுவர்கள் மட்டும் தற்போது கைது செய்யப்பட்டு கீழ்பாக்கத்தில் உள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள பாலகுமாரனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொகுதியிலேயே சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லாத அவலம் ஏற்பட்டுள்ளது