ஜாகீர் உசேன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

 ஜெயா பிளஸ் செய்தி எதிரொலியாக ஜாகிர் உசேன் பிஜிலி வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட ஜாகிர் உசேன் பிஜிலியின் மகன் உசூர் ரகுமான், தமிழக அரசு குற்றவாளிகளை காப்பாற்றுவதில் முனைப்பு காட்டுவதாகவும், அடுத்து தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனக் கூறும் வீடியோவை பகிர்ந்து நமது ஜெயா பிளஸ் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இதையடுத்து ஜாகிர் உசேன் பிஜிலி வீட்டிற்கு உரிய பாதுகாப்பு வழங்க நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அவரது வீட்டிற்கு தற்போது துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Night
Day