40 ஆண்டுகளாக இருந்த கடைகளை ரவுடிகளை வைத்து திமுகவினர் நள்ளிரவில் இடித்து தள்ளி அராஜகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலையில் 40 ஆண்டுகளாக இருந்த கடைகளை ரவுடிகளை வைத்து திமுகவினர் நள்ளிரவில் இடித்து தள்ளி அராஜகத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. 

திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட தண்டராம்பட்டு சாலையில் உள்ள தாமரை குளம் அருகே புறம்போக்கு இடத்தில் 40 ஆண்டுகளாக கோழி கறி கடை, பேட்டரி கடை, சேர் பழுது பார்க்கும் கடை, பஞ்சர் கடை உள்ளிட்ட 10 கடைகள் செயல்பட்டு வந்தன. கடைகளின் உரிமையாளர்கள் மின் கட்டணம், குடிநீர் கட்டணம், கட்டிட வரியும் மாநகராட்சியிடம் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், திமுகவை சேர்ந்த சமுத்திரம் பகுதியை சேர்ந்த பாட்ஷா என்பவரின் மகன் அயூப், ராமமூர்த்தி, வெங்கடேசன், சுதாகர் ஆகியோர் கடைகளை காலி செய்யச் சொல்லி மிரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 10 கடைகளின் உரிமையாளர்களும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், நேற்று இரவு மின்சாரத்தை துண்டித்து 20க்கும் மேற்பட்ட அடியாட்களை வைத்து ஜேசிபி இயந்திரம் மூலம் 10 கடைகளும் இடிக்கப்பட்டுள்ளன.


இந்நிலையில், தாங்கள் அளித்த புகாரின் பேரில் வந்த போலீசார், கடைகளை இடித்த ஜேசிபி இயந்திரத்தை மட்டும் பறிமுதல் செய்து கொண்டு சென்றதாக கடை உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் கடைகளை இடித்த திமுக-வைசேர்ந்த அயூப், ராமமூர்த்தி, வெங்கடேசன், சுதாகர் ஆகியோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டிய உரிமையாளர்கள், இடிக்கப்பட்ட கடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். 

Night
Day