ஜாபர் சாதிக் வழக்கில் திரைப்பட இயக்குநர் அமீருக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு சம்மன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் தொடர்புடைய போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திரைப்பட இயக்குனர் அமீர் உள்ளிட்ட 3 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திமுக பிரமுகரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாஃபர் சாதிக், டெல்லியில் கடந்த 9ம் தேதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தமிழ் மற்றும் இந்தி திரையுலகை சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜாபர் சாதிக் தொடர்புடைய போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திரைப்பட இயக்குனர் அமீர், அப்துல் பாசித் புகாரி, சையத் இப்ராஹிம் ஆகிய மூவருக்கும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 2ம் தேதி டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் மூவரும் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day