திமுக நிர்வாகி கொலை வழக்கு - கைதான நபரின் வீட்டில் போலி பத்திரம் பறிமுதல்

எழுத்தின் அளவு: அ+ அ-

நிலத்தகராறில் திமுக முன்னாள் எம்பி குப்புசாமியின் உதவியாளர் குமார் கொலை வழக்கில் கைதான ரவி என்பவரின் ஊரப்பாக்கத்தில் உள்ள வீட்டில் இருந்து சம்பந்தப்பட்ட நிலத்தின் போலி பத்திரத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

கொலையான குமாரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டதால், அறிவியல் ரீதியாக அடையாளம் காண்பதற்காக டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குமாரின் சட்டையை வைத்து மட்டுமே குடும்பத்தினர் அடையாளம் கண்ட நிலையில், சடலத்தில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியை வைத்து குடும்பத்தினரின் திசு மாதிரியை வைத்தும் டிஎன்ஏ பரிசோதனை செய்ய உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day