க்ரைம்
திமுக எம்எல்ஏ கார் மோதி ஒருவர் உயிரிழப்பு
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மனைவியை கடித்துக் குதறிய கணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சங்கரன்கோவில் திருவிக தெருவில் வசித்து வருபவர் ராமலிங்கம். இவர் அவ்வப்போது மது அருந்திவிட்டு மனைவி நாகலட்சுமியுடன் தகராறில் ஈடுபடுவது வழக்கம். இதில் மன வேதனை அடைந்த நாகலட்சுமி பலமுறை போலீஸில் கணவன் மீது புகாரளித்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மது அருந்தி விட்டு வந்த கணவரிடம் நாகலட்சுமி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த ராமலிங்கம், மனைவியை கை, கழுத்து, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் கடித்து குதறியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த நாகலட்சுமி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ராமலிங்கத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...