பள்ளி வாகனத்தில் வீடு திரும்பும் போது மாணவர்களுக்கு இடையே மோதல் - படுகாயமடைந்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே தனியார் பள்ளி வாகனத்தில் மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த 9ம் வகுப்பு மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட தாவாந்தெருவில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளியில் வெள்ளாண்டிவலசு பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் கந்தகுரு ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி வாகனத்தில் வீடு திரும்பும் போது மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த கந்தகுருவுக்கு, தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை அடுத்து, எடப்பாடி போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு, தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். தனியார் பள்ளி வாகனத்தில் மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில், 9ம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் எடப்பாடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Night
Day