பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி - இறந்த சிசு வயிற்றில் இருந்து அகற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வேலூர் அருகே பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு ஓடும் ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் வயிற்றில் இறந்த சிசு அகற்றப்பட்டது. 

கடந்த 6-ம் தேதி திருப்பூரில் இருந்து சித்தூருக்கு ரயிலில் பயணித்த 36 வயதுடைய 4 மாத கர்ப்பிணி, ஹேமராஜ் என்பவரால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு கே.வி. குப்பம் அருகே ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டார். 

படுகாயமடைந்த அவர் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், கடந்த 8ம் தேதி கர்ப்பிணியின் வயிற்றிலேயே 4 மாத சிசு இறந்தது. இதனிடையே மேல்சிகிச்சைக்காக ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனைக்கு கர்ப்பிணி மாற்றப்பட்டார். 

அங்கு அவருடைய வயிற்றில் இறந்த சிசுவை வெளியே கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. சிசுவை அகற்ற நேற்று இரவு மாத்திரை வழங்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் அறுவை சிகிச்சை இல்லாமல் தானாகவே இறந்த சிசு வெளியே வந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Night
Day