பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் கத்தியுடன் சுற்றித்திரிந்த மாணவர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் கத்தியுடன் சுற்றித்திரிந்த பச்சையப்பன் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

பெண் காவலர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து கொண்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் கத்தியுடன் நின்று கொண்டிருந்த கல்லூரி மாணவரை ரயில்வே போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் நாவலூரை சேர்ந்த கல்லூரி மாணவரான பார்த்திபன் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இரண்டாம் ஆண்டு பயின்று வருவது தெரியவந்தது. பார்த்திபனனுடன் நின்றிருந்த மற்றொரு மாணவர் விஷ்வா போலீசாரை கண்டதும் ஆயுதங்களுடன் தப்பி சென்றார். இதனையடுத்து, மாணவர் பார்த்திபனை கைது செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.  

Night
Day