பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை போலீசார் கைது செய்தனர். மயிலாப்பூரை சேர்ந்த இளம்பெண் கபாலீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய சென்ற போது ஒருவர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் பாலியல் தொல்லை அளித்த நபர் திருவல்லிக்கேணியை சேர்ந்த விஜயகுமார் என்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Night
Day