வருவாய்த்துறை அலுவலர்கள் S.I.R. பணிகள் புறக்கணிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

அதிக பணி நெருக்கடியை குறைத்திட வலியுறுத்தி SIR பணிகளை புறக்கணித்து வருவாய்த்துறை சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணிகளில் உரிய திட்டமிடலின்றியும், பயிற்சிகள் அளிக்காமல் அவசர கதிகள் பணிகள் மேற்கொள்ள நிர்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால்,  அனைத்து நிலை வருவாய்த்துறை அலுவலர்களுக்கும் கடுமையான பணி நெருக்கடிகள், மன உளைச்சல் ஏற்படுத்துவதாக கூறி தமிழக தலைமைத் தேர்தல் அலுவலரிடம் ஏற்கனவே முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், அதிக பணி நெருக்கடிகளை குறைக்க வேண்டும், தினமும் காணொளி வாயிலாக மூன்று கூட்டங்கள் நடத்தி துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் SIR பணிகளை வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் புறக்கணித்துள்ளனர். 

சென்னை எழிலகத்தில் வருவாய்துறை அலுவலர்கள் பலர் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் மதுரையிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகளை புறக்கணித்து வருவாய்த்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எஸ்.ஐ.ஆர்.பணி புறக்கணிப்பு போராட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணி மேற்கொள்ளும் சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், நகராட்சி, மாநகராட்சி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் கண்காணிப்பாளர் பணி மேற்கொள்ளும் அனைத்து துறை அலுவலர்களும் ஈடுபட்டுள்ளனர்.


Night
Day