மதுரையில் ஆட்டோமொபைல் நிறுவன உரிமையாளர் கடத்தல் - 9 பேர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரையில் ஆட்டோமொபைல் நிறுவன உரிமையாளர் கடத்தப்பட்டு மூன்று நாட்களாகியும் போலீசார் மீட்க முடியாமல் திணறி வருவதால் உறவினர்கள் அச்சமடைந்துள்ளனர். 

பீ.பி.குளம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர். திருமணமாகாமல் தனியாக வசித்து வரும் இவர், பைபாஸ் சாலையில் ஆட்டோமொபைல் உபகரணங்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு மதுரை, திண்டுக்கல் ஆகிய பல்வேறு பகுதிகளிலும் ஏராளமான சொத்துகள் உள்ளன. இதனிடையே சுந்தருக்கு சொந்தமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 6 ஏக்கர் அளவிலான நில விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவந்துள்ளது. 

இந்நிலையில் கடந்த 14-ஆம் தேதியன்று சுந்தரின் எதிர்தரப்பினர் நிலம் தொடர்பாக பீ.பி.குளம் பகுதியில் உள்ள வீட்டில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதையடுத்து மேலும், பேச்சுவார்த்தை நடத்த சுந்தரை 15-க்கும் மேற்பட்ட நபர்கள் தனியாக காரில் அழைத்து சென்றுள்ளனர். இரவு நேரமாகியும் சுந்தர் வீடு திரும்பாததால் சிலர் காரில் கடத்திசென்றதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவுசெய்து தனிப்படைகள் அமைத்து தேட தொடங்கினர். போலீசார் சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து வாகன பதிவெண்கள் குறித்து விசாரணை நடத்தினர். இதில் 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

இதனைதொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த தகவலில்படி சுந்தரை கடத்திய நபர்களின் செல்போன் எண் வடமாநில பகுதியில் இருப்பதாக தெரியவந்ததால் போலீசார் வடமாநிலத்துக்கு விரைந்துள்ளனர். 3 நாட்களாகியும் போலீசாரால் சுந்தரை மீட்க முடியாத நிலையில் அவரது உறவினர்கள் அச்சமடைந்துள்ளனர்.

Night
Day