ரவுடி ஜான் வெட்டிக் கொலை : தலைமறைவாக இருந்த கொலைக் குற்றவாளிகள் 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரோட்டில் ரவுடி ஜான் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் ஐந்து பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த இரண்டு பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.   

சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி ஜான் என்பவர் தனது மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஈரோடு மாவட்டம் நசியனூரில் கார் மீது வாகனத்தை மோதி நிறுத்திய கும்பல் ரவுடி ஜானை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பியோடியது.

இதையடுத்து விரைந்து சென்ற போலீசார் தப்பியோடியவர்களில் ஒருவரை கையில் வெட்டு காயங்களுடன் பிடித்தனர். மற்ற மூன்று பேரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த நிலையில் இரண்டு பேர் தலைமறைவாகிவிட்டனர். இதனையடுத்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், இந்த கொலையில் தொடர்புடையதாக சேலம் மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஐந்து பேரை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சலீம் மற்றும் ஜீவகன் ஆகிய இருவரும் ஈரோடு நீதிமன்றத்தில் இன்று சரணடைந்துள்ளனர்.

Night
Day