விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அண்ணனை விடுவிக்கக்கோரி தங்கைகள் தற்கொலை முயற்சி - ஒருவர் உயிரிழப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

விசாரணைக்கு அழைத்துச் சென்ற தங்களின் சகோதரரை விடுவிக்கக் கோரி காவல் நிலையம் முன்பு விஷம் குடித்த சகோதரிகளில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவேரி பகுதியைச் சேர்ந்தவர் அய்யா தினேஷ். இவரை விசாரணைக்காக நடுக்காவேரி போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த நிலையில் தங்களது சகோதரரை விடுவிக்கக் கோரி அவரது சகோதரிகளான 29 வயதான கீர்த்திகா மற்றும் 33 வயதான மேனகா இருவரும் காவல்நிலையம் முன்பு விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர். இவர்களை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், கீர்த்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேனகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, மருத்துவமனையில் குவிந்த அவர்களது உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அய்யா தினேஷ் மீது போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள உறவினர்கள், நடுக்காவிரி காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இளைஞரை விடுவிக்கும் வரை உடலை வாங்கமாட்டோம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

Night
Day