அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி வழக்கில் இருந்து நீதிபதி விலகல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி வழக்கில் இருந்து நீதிபதி விலகியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் துணை இயக்குநராக இருந்த அங்கித் திவாரி, மருத்துவர் சுரேஷ்குமார் என்பவரின் வழக்குகளை முடித்து தருவதாக கூறி இருக்கிறார். இதன்பேரில், 3 கோடி ரூபாய் பேரம்பேசி, 20 லட்சம் ரூபாய் வாங்கியபோது லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டார். அவரது தரப்பில், இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் ஒரே நேரத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்திருப்பதாகவும் குற்றம்சாட்டினர். இதைக் கேட்ட நீதிபதி விவேக்குமார் சிங், இந்த வழக்கை தான் விசாரிக்க விரும்பவில்லை என்றும், விலகுவதாகவும் கூறினார்.

Night
Day