உதயநிதிக்கு எதிரான விசாரணை தொடர்ந்து நடைபெறும் - உச்சநீதிமன்றம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சனாதன தர்மம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான விசாரணை தொடர்ந்து நடைபெறும் என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்துக்களின் அடையாளமாக கருதப்படும் சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா உள்ளிட்டவற்றுடன் ஒப்பிட்டு, அதனை வேரறுக்க வேண்டும் என நிகழ்ச்சி ஒன்றில் உதயநிதி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.  இதைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தனக்‍கு எதிராக பதிவு செய்யப்பட்ட எஃ.ப்.ஐ.ஆரை ஒன்றிணைக்க கோரி உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான விசாரணை தொடர்ந்து நடைபெறும் என தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு திட்டவட்டமாக தெளிவுபடுத்தியது. இந்த வழக்கு அடுத்த ஆண்டு  பிப்ரவரி 17 ஆம் தேதிக்‍கு ஒத்திவைக்‍கப்பட்டுள்ளது. 

Night
Day