எல்பிஜி டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலைநிறுத்தம் - எரிவாயு தட்டுப்பாடு அபாயம்

எழுத்தின் அளவு: அ+ அ-

வேலைநிறுத்த போராட்டம் அறிவித்ததையடுத்து, எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்களுடன் எண்ணெய் நிறுவனங்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றன.

2025-30ஆம் ஆண்டுகளுக்கான புதிய ஒப்பந்த விதிகளை அண்மையில் வெளியிட்ட எண்ணெய் நிறுவனங்கள் இரண்டு அச்சு லாரிகளை பயன்படுத்தக் கூடாது என்றும் மூன்று அச்சு லாரிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவித்திருந்தது. மேலும் மாற்று ஓட்டுநர் இல்லை என்றால் இருபதாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்த விதிமுறைகளால் டேங்கர் லாரிகளை இயக்க முடியாதநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். விதிமுறைகளை தளர்த்தி அறிவிக்காத வரை போராட்டம் தொடரும் என்றும் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் திட்டவட்டமாக தெரிவித்தது. இதன்காரணமாக தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே எண்ணெய் நிறுவனங்களுடன் நடத்திய 3 கட்ட பேச்சுவார்த்தகளிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, டேங்கர் லாரி உரிமையாளர்களுடன் எண்ணெய் நிறுவனங்கள் இன்று பேச்சவார்த்தை நடத்த உள்ளன. 

Night
Day