செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட இரானி கொள்ளையனுக்கு நீதிமன்ற காவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஒரே நாளில் ஏழு செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட இரானி கொள்ளையனுக்கு வரும் 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று முன் தினம் 7 இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்ட இரு இரானி கொள்ளையர்களை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவர்களில் ஜாஃபர் குலாம் என்பவர் நேற்ற என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொரு கொள்ளையன் விசாரணை முடிந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் வருகிற ஒன்பதாம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க  நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, அந்த கொள்ளையன் சிறையில் அடைக்கப்பட்டான். ஏற்கனவே ஓங்கோலில் கைது செய்யப்பட்ட சல்மான் ஹுசைனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 

varient
Night
Day