கள்ளக்குறிச்சி: அரசு அதிகாரிகள் கையூட்டு பெற்று பிளாஸ்டிக் விற்பனைக்கு அனுமதிப்பதாக புகார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கார்ப்பரேட் கம்பெனிகளிடம் கையூட்டுப் பெற்றுக் கொண்டு பிளாஸ்டிக் கவர் விற்பனையை அரசு அதிகாரிகள் அனுமதிப்பதாக விக்கிரமராஜா குற்றம் சாட்டியுள்ளார். கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் நடைபெற்ற பொது கூட்டத்தில் கலந்து கொண்ட அச்சங்கத்தின் மாநில தலைவர் விக்கிரமராஜா பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கார்ப்பரேட் கம்பெனிகளிடம் கையூட்டுப் பெற்றுக் கொண்டு பிளாஸ்டிக் கவர் விற்பனையை அரசு அதிகாரிகள் அனுமதிப்பதாக குற்றஞ்சாட்டினார். மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் வணிகர்களின் கோரிக்கைகள் குறித்து எந்த கட்சியினர் பரிசீலிக்கின்றனரோ அவர்களுக்கே ஆதரவு தரப்படுமென்றும் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

Night
Day