தனியார் காற்றாலை நிறுவனங்களுக்கு ரூ.37.80 லட்சம் அபராதம் விதிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீர்நிலைகள் மீது காற்றாலை மின் கம்பங்களை நிறுவிய தனியார் நிறுவனங்களுக்கு சுமார் 38 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கிராமங்களில் நீர்நிலைகளில் தனியார் நிறுவனங்கள் நிறுவிய 84 காற்றாலை மின் கம்பங்களை அகற்றக்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி ஆர் சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காற்றாலை மின் கம்பங்களை நிறுவிய தனியார் நிறுவனங்கள் 37 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அபராதமாக செலுத்தி, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட குளங்களை தூர்வார உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

Night
Day