மணிமுத்தாறு மற்றும் அகஸ்தியர் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக மணிமுத்தாறு மற்றும் அகஸ்தியர் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. 

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அகஸ்தியர் அருவி மற்றும் மணிமுத்தாறு அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்நிலையில், சுற்றுலா பயணிகளின் நலன் கருதி அகஸ்தியர் அருவி மற்றும் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் பார்வையிட மட்டும் அனுமதி வழங்கி உள்ளனர்.

Night
Day