ரயில் தண்டவாளத்தில் திடீர் விரிசல் - பெரும் விபத்து தவிர்ப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.

திருக்காம்புலியூர் பகுதியில் கரூர் - திருச்சி ஒரு வழி ரயில் பாதையில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. அந்த பகுதியில் வசித்துவரும் ரயில்வே ஊழியர் அளித்த தகவலை அடுத்து, அந்த பாதையில் வந்த எர்ணாகுளம் - காரைக்கால் விரைவு ரயில் சிவப்பு கொடி காண்பித்து 100 மீட்டர் தூரத்தில் ரயில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தண்டவாள விரிசலை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து தண்டவாளம் சீர்செய்யப்பட்டு ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் அந்த வழியாக ரயில் சேவை மீண்டும் துவங்கியது.

Night
Day