ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில்உள்ள அம்மா உணவகம் மூடல் - நோயாளிகள் அவதி

எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வந்த அம்மா உணவகம் மூடப்பட்டதால் நோயாளிகள் மலிவு விலை உணவின்றி அவதியடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல ஆண்டுகளாக அம்மா உணவகம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அம்மா உணவக கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆபத்தான நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இன்று அதிரடியாக அம்மா உணவகம் மூடப்பட்டுள்ளது. இதனால் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளுக்கும், அவர்களுடன் உதவிக்கு வரும் உறவினர்களுக்கும் மலிவு விலை உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

Night
Day